Monday, October 19, 2009

இருக்கு கவிதைகள்


1.
நீங்கெல்லாம் சேத்துல

கையைவச்சாத்தா நாங்கெல்லாம்

சோத்துல கையவைக்க முடியும்னு சொல்லுறான்

கூத்துல பொறங்தவன்.

எலேய் !

சேத்துல கைய வச்சதால

எங்க கையெல்லாம் எரிஞ்சிகிட்டிருக்கு

சூத்துலகைய வச்சதால

உங்க கையெல்லாம் சொறிஞ்சிகிட்டிருக்கு.


2.
ஒருதுளி வியர்வைக்கு

ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ்ல்லவா...

- திரைப்படப்பாடல்


எட்டு வயசுப் புள்ள ஒட்டின தீப்பெட்டில

ஒண்ணு,ரெண்டு ஒழுங்கா ஒட்டுலைனு

ஒரு நா(ள்) கூலியபுடிச்சிட்டுத் தர்ரானுக

கூறுகெட்ட கூ....யானுக.


3.
ஒவ்வொரு மாதத்தின்

முதல் சனிக்கிழமை இரவில் துவங்குகிறது

இந்த திருப்பள்ளி எழுச்சி

வில்ஸ் புகையில் சுக்கா வாசம் மிதக்கும்

நிறம் மாறி இருக்கும்

குளிர்பானம் ஊற்றப்பட்ட சரக்கு

வீட்டுக்காரக் கிழவியின்

குறட்டை தாண்டி உள்ளறைக்குள்

வந்து சேரும் மெட்டியணிந்த இருபாதம்

விளக்கணைக்கப்பட்ட உள் அறைக்குள்


ன்


ன்


பி

ன்



ன்

றா

ய்


உருவங்கள்

அதிகலையில் கேட்டது அந்தக் குரல்

எம் புள்ள மாதிரி இருக்கீங்க..

ஒருபத்து ரூவா சேத்துக்குடுங்க..

4.
குண்டி காய்ஞ்சுகிடக்கிற ஊருக்குள்ள

எண்ணைக் கிணறு தவிர

எல்லா இடத்திலேயும் குண்டப் போடுறானுகளேன்னு

நா பொலம்புறத கேட்டு

அப்பாத்தா சொன்னா

"இவனுங்களத்தா நம்மூர்ல

பொணம் விழுந்த வூட்டுலயும் பொம்பளைக்கு

அலையறவுனு சொல்லுவாங்க".


5.
கட்டுன பொண்டாடிய

காசுக்காக கண்டவன்கிட்ட

உட்டுட்டு அப்புறம்

அரிப்பெடுக்கறப்போ

காசுகொடுத்துபோன கதையா இருக்கு

அரசாங்க சொத்த அடுத்தவனுக்கு விக்கிறதும்

அவன் கிட்டேயே கடன் கேட்கிறதும்.

6.
குளித்துவிட்டு

கோவிலுக்குள் வரச் சொல்லியிருக்கிறாய்

சரி

எங்களையும் விடச் சொல்

எல்லோரும் குளிக்கிற குளத்தில்.

7.
தங்கச்சி குளிக்க

தடுக்கு கட்டவக்கில்ல

தாயோளி!

செங்கல்ல தூக்கிட்டுபோறான்

கோயில் கட்ட.

8.

குருடன் பார்க்கிறான்

செவுடன் கேட்கிறான்

முடவன் நடக்கிறான்

அரவாணி புள்ளை பெக்கிறான்

பிராத்தனை கூட்டத்திற்குப்போக முடியாமல்

மூட்டு வலியால் படுத்திருக்கிறார்

போப்பாண்டவர்.

9.
சோறாக்க இருக்கற சட்டிய

விக்கும்போது இளிச்சிட்டு

சதவிகிதத் தட்டோடு சாப்பாடு கேட்கிற

சாதித் தலைவனுக்கு

சரியான பேரு

எச்சகலை..

10.
மாதவிலக்கின் மஞ்சள் துணி மேல்

விந்துக்கறை போல்

உந்தன்கவிதை.

எந்த பயனும் இல்லாமல்.

(குறிப்பு : உன் அரிப்பு தீர்ந்திருக்கும்)


வாழ்பானுபவ கவிகளுக்கு...

11.
உனக்கு சொரணைஇருக்கிறத?

என்று கேட்டு விட்டான்.

இருக்கிறது என்று சொல்ல முடிவதில்லை.

எல்லாவற்றயும் பார்த்து

கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதால்.

Monday, February 9, 2009

'கனி'யம்மாவின் சிரிப்பு

ஈழ பிரச்சனைக்காக ஈழத்தமிழர் நல உரிமை பேரவை சார்பாக பதினொன்றாம் தேதி கோவையில் பேரணி, பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் என்றாலே பிளக்ஸ் போர்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. பிரச்சனையை பற்றி போர்டில் இருக்கிறதோ இல்லையோ. தங்கள் முகம் பிரச்சாரமாக வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கும் உடன் பிறப்புகள் போட்டி போட்டு பிளக்ஸ் போர்டுகளால் தெருவை நிறைக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் ஈழத்தில் கண்ணீரோடும், கதறலோடும் போராடிக்கொண்டிருக்கிற மக்களுக்கான இந்தப் பேரணியில் திரும்பிய திசையெல்லாம் வைத்திருக்கிற பிளக்ஸிகளில் முத்துவேலர் பேத்தி முத்துப்பல் தெரிய கவிப்புன்னகை புரிகிறார். ஒரு எரியும் பிரச்சனைக்காக பேரணி, பொதுக்கூட்டம் நடத்துபவர்கள் அந்த பிரச்சனையின் தன்மைக்கேற்ற பிளக்ஸ் போர்டுகளை, படங்களை கூட தெரிவு செய்ய தெரியாதவர்கள் எனில் இவர்களுக்கு இந்த பிரச்சனை பற்றிய அக்கறை எவ்வளவு? இவர்களின் இந்த போராட்டம் அதன் ஆத்மர்த்தம் என்ன?